சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பியில் டாப் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருக்க முக்கிய காரணமே குணசேகரன் கதாபாத்திரம் தான். வில்லனாக அனைவரையும் கவர்ந்திழுத்த குணச்சேகரன் கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வந்துள்ளார்.
அஜித்தின் நெருங்கிய நண்பராக இருந்து பல அனுபவங்களை பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் டப்பிங் பணியின் போதே இன்று மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு பதிலாக இனி யார் ஆதி குணசேகரனாக நடிக்க முடியும். அவரை போல் நடிக்க யாராலும் முடியாது. அவரது இடத்தை நிரப்ப முடியாது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது அவருக்கு பதில் ஒரு நடிகரை பிடித்திருக்கிறார்கள். பல படங்களில் நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி தானாம்…