திரையுலகை பொறுத்தவரை படங்களில் பட வாய்ப்புகள் நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகைகளுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை. ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுகின்றனர். அந்த வகையில் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை நதியா.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ்-களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே சினிமாவிலிருந்து விலகியுள்ளார்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் எம்.குமரன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை நதியா மற்றும் நடிகர் சுரேஷ் இருவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். இவர்கள் படங்களில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ் நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள் தான். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.