இதை செய்திருந்தால் நடிகர் மாரிமுத்துவை காப்பாற்றி இருக்கலாம்… மாரிமுத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி…!!

சினிமா

திரையுலகில் இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் காலையிலேயே டப்பிங் பேச சென்ற நிலையில் அவருக்கு ஸ்டூடியோவிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின் அவரே காரை ஓட்டி சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்நிலையில் மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தற்போது ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் மாரிமுத்து நெஞ்சு வலி வந்த பிறகு அவரே கார் ஓட்டி வந்திருக்கிறார். ஹாஸ்பிடலில் வந்து வண்டியை நிறுத்தியதும் அவரால் வண்டியில் இருந்து இறங்க முடியவில்லை.

மருத்துவமனை ஊழியர்கள் அதை பார்த்து அவரிடம் சென்ற போது மாரிமுத்து அவர்கள் மீது நினைவிழந்த விழுந்திருக்கிறார். உடனே அவரை ஹாஸ்பிடலில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு pulse சுத்தமாக இல்லாமல் இருந்ததால் உடனே தேவையானதை செய்தோம்.

ஆனால் எங்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரிமுத்து அவரே கார் ஓட்டி வந்தது தவறு. அவருக்கு ஏற்கனவே இதயத்தில் இரண்டு stent பொருத்தப்பட்டு இருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் போன் செய்தால் உடனே வந்திருப்பார்கள். அல்லது உதவிக்கு யாரையாவது அழைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவரது உயிரை காப்பாற்ற வாய்ப்பிருந்திருக்கும் என டாக்டர் கூறி இருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *