தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா. முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பெற்று வெற்றி பெற்றவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டும் தான். தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. அதன் பின் பல வெற்றிப்படங்களில் நடித்துமுன்னணி நடிகையானார்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். மேலும் இவர் 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த நதியா தற்போது அக்கா மற்றும் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
54 வயதாகும் நடிகை நதியாவிற்கு சனம், ஜனா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்குள் நுழைய வைப்பதை வழக்கம் நடிகை நதியா மட்டும் வித்தியாசமாக இருந்து வருகின்றார். ஆம் தனது இரண்டு மகள்களை சினிமாவிற்குள் எட்டிப்பார்க்க விடவில்லை நதியா.
மூத்த மகள் சனம் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்க இளைய மகள் ஜனா அங்கு வேலை செய்து வருகின்றார். 54 வயதிலும் இளமையாக இருப்பதற்கு நதியா கூறும் காரணம் என்னவென்றால், முறையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று தனது அழகின் ரகசியத்தினை வெளியிட்டுள்ளார்…