பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. இவர் ஆரம்பத்தில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தன் நடனத் திறமையால் பிரபலமானார். அதன் பின் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் தென்றல் சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் கொஞ்சம் வில்லத்தனம் காட்டி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீனாட்சி பொன்னுங்க சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
நடிகை காயத்ரி நடன கலைஞரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 12 வயதில் தருண் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் 12ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தைக்கு தாயாகப் போவதாக அறிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடைபெற்றிருக்கின்றது. அதில் இவருடன் நடித்த பல சீரியல் நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள்…
View this post on Instagram