தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் மக்கள் மத்தியில் பெருமளவில் பார்க்கபடுவதோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சொல்லப்போனால் வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களையே ஓரம்கட்டும் அளவிற்கு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பல முன்னணி நடிகர் நடிகைகளும் சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் அந்த வகையில் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியாகத் தான் இருக்கும். அந்த வகையில் பல முன்னணி தொடர்களுக்கு அடித்தளமாக இருந்ததோடு பல இல்லத்தரசிகளின் விருப்ப சேனலாக இருந்து வருகிறது.
இயக்குனர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் நந்தினி என்ற தொடர் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் மிகவும் இந்த ஓடிய ஒரு தொடராக இருந்து வந்தது. இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை நித்யா ராம்.
சின்னத்திரை சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை தான் சாரும். இந்தத் தொடரில் நாக கன்னியாக நடித்த நித்யா ராம் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளசுகள் மனதையும் கொள்ளை கொண்டார். தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தமிழ் ராம் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர் ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒளிபரப்பான ஒரு தொடரில் நடித்திருந்தார். நித்யாராம் 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை நித்யா ராம் சில காலமாக காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தனது இரண்டாவது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்…