பூண்டை நாம் சமையலுக்கு பயன்ப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு தெரியும். பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த பூண்டுக்கு உண்டு.
பூண்டு உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டு உங்க டாய்லெட்டுக்கும் ரொம்ப நல்லது. என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. நாம் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை எடுத்து அதை நன்றாகத் தட்டி கழிவறையில் போட வேண்டும்.
மறு நாள் காலையில் அந்த டாய்லெட்டை சுத்தம் செய்தால் கிருமித்தொல்லை நீங்கி விடும். இதே போல் இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. கொதிக்கிற தண்ணீரில் பூண்டை நறுக்கிப் போட்டு அது நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
அதன் பின் அந்த தண்ணீரை வடிகட்டி, அதை இரவு நாம் தூங்குவதற்கு முன் கழிவறையில் ஊற்ற வேண்டும். மறு நாள் காலையில் இதை தேய்த்துக் கழுவினால் டாய்லெட்டில் துர்நாற்றம் இருக்காது. இதை வாரம் இரு முறை இப்படி செய்தால் உங்கள் டாய்லெட்டில் கரையும் படியாது. பாக்டீரியாக்கள் அழிந்து விடும். இதை உங்க வீட்டில் செய்து பாருங்க…