பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தொடர்ந்து முன்னணி இடத்தில் உள்ளது. கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. மேலும் அந்த வகையில் இந்த சீரியலில் உள்ள ஒரு அருமையான ஸ்மார்ட்டான கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன்.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்திருந்தார். அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் ஆகின. அதிலும் குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இந்நிலையில் இவரின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் இதனையடுத்து ‘எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரனாக யார் நடிக்கப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் குறித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப் போகிறார் என கூறப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால், ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பது போல் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சீரியல் குழுவினர் நடிகர் ராதா ரவி, நடிகர் பசுபதி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்திருந்தனர். இதில் கிட்ட தட்ட பசுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.