விஜய் டிவியில் அறிமுகமான பலர் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருப்பது போலத் தான் தற்போது புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எவ்வளவோ சோதனைகளை கடந்த புகழ், தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்ற ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் மேலும் அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார். புகழுடைய காமெடியை பார்த்து பலர் தங்களுடைய சோகங்களை மறந்து மகிழ்ச்சியை கொண்டு வருவதாக கூறி வருகிறார்கள்.
புகழ் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அத்தோடு தங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதையும் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் இன்றைய தினம் தன்னுடைய மனைவியின் வளைகாப்பு நிகழ்வைக் கொண்டாடியுள்ளார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படம்..