எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார் தெரியுமா? அட அவரும் ஒரு பிரபலமா??

சினிமா

பிரபல சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை திருச்செல்வம் பெண்களை மையப்படுத்தி எடுத்து வரும் தொடர். இதில் பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை இந்த சீரியல் காட்டுகிறது.

ஏகப்பட்ட பெண் ரசிகைகளின் பேவரெட் தொடராகவும் இது அமைந்து விட்டது. இந்த தொடரில் திருப்பு முனையாக அமையும் ஒரு கதைக்களம் ஒளிபரப்பானது. ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த டிராக் வந்தது.

ஆனால் ரசிகர்கள் இயக்குனரின் இந்த முடிவில் கடும் கோபத்தில் உள்ளார்கள். ஆதிரையாக தொடரில் நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் சத்யா தேவராஜ். இவர் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் சன் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி வந்துள்ளார்.

அதன் பின் அருவி தொடரில் நடித்து வந்த இவர் இப்போது எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையாக நடித்து வருகிறார். சீரியலில் கலவரமாக இவரது திருமணம் முடிந்து விட்டது நிஜத்தில் ஆனந்த் என்ற பிரபலத்துடன் இவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *