தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின் நடிகராக உருவாகி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி. மேலும் இவர் நடிக்கும் படங்களில் கோடி கோடியாய் செலவழித்து ப்ரோமோஷன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. டைட்டிலை மட்டுமே வைத்து ப்ரோமோஷன் செய்து விடலாம்.
அந்த அளவுக்கு இவரது பட டைட்டில்கள் எதிர்மறை பெயர்களை கொண்டே இருக்கும். உதாரணமாக பிச்சைக்காரன், சைத்தான், எமன் என முழுக்க, முழுக்க நெகட்டிவான டைட்டிலை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார். பொதுவாகவே இவரது படங்களில் நடிக்கும் நடிகைகள் புதுமுக நடிகைகளாகவே பெரும்பாலும் அவருடன் இணைந்து நடிப்பார்கள்.
ஆனால் அந்த நடிகைகள் பலரும் தொடர்ந்து மார்க்கெட்டை பிடிக்க மாட்டார்கள் சில நடிகைகள் இவருடன் நடித்தது தான் முதலும், கடைசியுமாக சினிமாவை விட்டே காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.
மேலும் இவரது மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மகள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலையில் தூக்கிட்ட நிலையில் மீரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது…