தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனி மகள்… தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி…!!

சினிமா

விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா இன்று அதிகாலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல்வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தற்கொலை எண்ணம் குறித்து விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

இதில் “நிறைய பேருக்கு அந்த எண்ணம் வருகிறது என கேள்விப்படுகிறேன். பணத்தினால் பலருக்கும் அந்த எண்ணம் வருகிறது. மற்றவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும் போது அந்த எண்ணம் வருகிறது.

மேலும் குறிப்பாக படிப்பினால் மாணவர்களுக்கு பிரஷர் கூடுகிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன் போ, அது போ இது போ என அவர்களை நாம் ஒரு எந்திரமாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதிக பிரஷர் கொடுக்குறாங்க. பிள்ளைகளை ஃப்ரீயா விடுங்க” என பேசியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *