பிரபல தயாரிப்பாளருடன் நடிகை திரிஷாவுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை த்ரீஷா. இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். அதன் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும்  நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.

மேலும் அதன் பின் நடிகர் கமலின் 234வது படத்திலும் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷாவின் திருமணம் குறித்து பல செய்திகள் இதற்கு முன் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று திரிஷாவின் திருமணம் திடீரென நின்று போனது.

அதன் பின் திருமணம் குறித்து நடிகை திரிஷா எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *