சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இந்த சீரியலில் உள்ள ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகின்றார்.
இவருக்கு பல ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பினால் உயிரிழந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அளவு குறைந்து விட்டது.
மேலும் இதனை தொடர்ந்து தற்போது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹரிப்ரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய படி இருக்கும் புகைப்படத்தை இவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டும் இருக்கின்றார்…