கால் நழுவி சரிந்து விழுந்ததில் பிரபல நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்…!!

சினிமா

திரையுலகைப் பொறுத்தவரை சமீபகாலமாகவே அடுத்தடுத்து பல திடீர் உயிரிழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் அகில் மிஷ்ரா உயிரிழந்துள்ளார்.

இவர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் 2009 இல் வெளியான ‘3 இடியட்ஸ்’ என்ற படத்தில் கல்லூரி நூலகராக தூபே என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் சமயலறையில் வேலை செய்துகொண்டிருக்கின்றார். அப்போது எதிர்பாராத சமயத்தில் கால் நழுவி சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவரின் நகைச்சுவை கலந்த அப்பாவியான உடல்மொழியை தனது நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவரின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் தங்களது இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *