மீரா விஜய் ஆண்டனி கடந்த 3 தினங்களுக்கு முன் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது. பிச்சைக்காரன் திரைப்படத்தை விட இது கொஞ்சம் குறைவாக வசூல் செய்தது.
மேலும் இதனை தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமைச்சாலியாக இருந்து வரும் விஜய் ஆண்டனிக்கு ஷீட்டிங்கின் போது ஒரு விபத்து ஏற்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு பின் தீவிர சிகிச்சைக்கு பின் குணமாகி விட்டார்.
இந்த நிலையில் இவரின் மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனி மன அழுத்தம் காரணமாக அவரின் வீட்டில் கடந்த 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த செய்தி சினிமா பிரபலங்களை தாண்டி முழு இந்தியாவை உழுக்கிய ஒரு கோரச் சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
இது ஒரும் புறம் இருக்கையில் தற்போது தற்கொலை தொடர்பான விசாரணையில் மீரா இறப்பதற்கு முதல் நாள் இரண்டு மனநல மருத்துவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளார். அன்றைய தினம் அனுமதி கொடுக்க முடியாத நிலையில் அடுத்த நாள் மீராவை மருத்துவமனைக்கு வருமாறு ரிப்ளை மெசேஜ் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் மெசேஜ் வரும் போது மீரா நம்மை விட்டு சென்று விட்டார். இதனை அவரின் தொலைபேசியை ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.