பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய டாப் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். இந்த சீரியலில் தருண் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராகுல் ராமச்சந்திரன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் மௌன ராகம் என்ற சீரியல் மூலமாக முதன் முதலில் அறிமுகமாகி உள்ளார்.
இந்த சீரியலில் இவர் ஹீரோ வருணின் தம்பியாகவும், வில்லி ஸ்ருதியின் கணவராகவும் நடித்திருந்தார். மேலும் குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் சம்பந்தம் என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இது மலையாள சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ஒரு தொடராகும்.
மேலும் இந்த நிலையில் ராகுல் தனது பல வருட காதலியான அஸ்வதியுடன் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது அவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இவர்க்ளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். திருமண ஜோடியின் புகைப்படம்..