மலையாள சினிமாவில் உதவி இயக்குராக இருந்து தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் கேஜி ஜார்ஜ். 1975ம் ஆண்டு ஸ்வப்நதானம் என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குநர் ஆனார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு சிறந்த திரைப்படம் என்ற விருதையும் பெற்றது.
மேலும் இதனைத் தொடர்ந்து உள்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு பிளாஷ்பேக், அடமிண்டே வாரியேள் மற்றும் மேட்டோரல் என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநாக பிரபலமானார். சினிமாவில் இவரின் சேவையை பாராட்டும் வகையில் கேரள அரசு இவருக்கு உயரிய விருதான ஜே சி டேனியல் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
1998ம் ஆண்டு எலவம்கோடு தேசம் படத்தை இயக்கி இவர் அதன் பிறகு எந்த படத்தையும் இயக்க வில்லை. இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காக்கநாட்டில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.
மேலும் அவருக்கு மனைவி செல்மா ஜார்ஜ் என்ற மனைவியும், தாரா என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். இவரது மரணம் மலையாள சினிமாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கேஜி ஜார்ஜின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் காக்கநாட்டில் உள்ள வீட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்…