தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிக அளவு குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த “நாடோடிகள்” என்ற திரைப்படத்தில் அவருடைய வெகுளித் தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து “நான் மகான் அல்ல” திரைப்படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
மேலும் அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த “யுத்தம் செய்” என்ற திரைப்படத்தில் ஒரு வினோதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பிரபலமானது “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி மூலம் தான்.
இந்த நிகழ்ச்சிகள் அவர் கேட்கும் கேள்வி மற்றும் ரியாக்சன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விட்டது. சமீப காலமாக உடல் எடை கூடி இருக்கும் நடிகை தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து வெறும் பணியன் மட்டும் அணிந்து கடற்கரையில் தன்னுடைய கணவருடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பார்த்த நெட்டிசென்கள் “ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல…என கமெண்ட் செய்து வருகின்றன…