விக்ரம் வேதா திரைப்பட இசையமைப்பாளர் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்…!!

சினிமா

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவர் விக்ரம் வேதா, கைதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் வெற்றிக்கு இவருடைய இசை பக்க பலமாக இருந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சாம் சி.எஸ். பெரும்பாலும் இவரின் இசை டெரர்ரான டார்க் ஹாரர், திரில்லர், ஆக்ஷன் ஆகவே இருந்துள்ளது.

பாடல்கள் எழுதும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவரை இசையமைப்பாளராக்கி அழகு பார்த்தது தமிழ் திரையுலகம். அம்புலி ‘3டி’யில் துவங்கிய இவரது இசைப்பயணம் கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, அடங்கமறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், எனிமி, நோட்டா, ராக்கெட்டிரி என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருக்கும் இவரது தாய் இன்று மரணமடைந்துள்ளார். அவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான தேனி நாராயணத்தேவன் பட்டியில் நடைபெறுகிறது. சாம் சி.எஸ் தாயாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *