ரியல் ஜோடிகள் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள்… கல்யாணத்துக்கு கிடைத்த சம்மதம்… யார் அந்த ஜோடி தெரியுமா??

சினிமா

தமிழ் சின்னத்திரையில் 5 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

மேலும் இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா நடித்து வந்த நிலையில் அவருடைய முகப்பரு பிரச்சனை காரணமாக முதலில் சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் ஐஸ்வர்யாவை மீண்டும் சீரியலுக்குள் கொண்டு வர கண்ணனாக நடித்து வரும் சரவணன் அதிக முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாக ஏற்கனவே தகவல் பரவியது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *