தனது மகளின் இறப்பு குறித்து முதன்முறையாக பேசிய விஜய் ஆண்டனி- என்ன கூறியுள்ளார் பாருங்க

சினிமா

தற்போது இருக்கும் காலகட்டத்தில் உதவி என்று கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் சிலர், அதில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவர் படம் நடிப்பார், பேட்டிகள் கொடுப்பார் அவ்வளவு தான் மக்களுக்கு தெரியும்.

ஆனால் அவருடன் பழகியவர்கள் விஜய் ஆண்டனி போல ஒரு நல்ல மனிதரை காண முடியாது என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு மற்றவர்கள் மீது அக்கறை காட்டி வந்த அவருக்கு சமீபத்தில் ஒரு சோகமான விஷயம் நடந்தது.  அதாவது அவரது மூத்த மகள் இறந்து விட்டார்.

மேலும் இந்த செய்தி கேட்ட அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தான் நடித்துள்ள ரத்தம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தனது இரண்டாவது மகளுடன் வந்திருந்தார். அப்போது தனது மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி மேடையில் பேசியுள்ளார்.

அதில் அவர் சிறுவயதில் இருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது ஒன்று தான். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன்.

ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை. வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன். நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன் என பேசியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *