தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சுகன்யா. இவர் 22 வயதில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையானார்.
மேலும் கடந்த 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு ஆண்டு தான் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். ஓராண்டிலே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
விவாகத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி பின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன் பின் ஒரு சில படங்களிலும் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்தும் வருகிறார்.
தற்போது 57 வயதாகும் நடிகை சுகன்யா இன்னும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகாக இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது…