பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று டைட்டிலை வெற்றிப் பெற்றவர் தான் சின்மய். இவரின் பாடும் திறமையைப் பார்த்து ஏ.ஆர்.ரகுமான் இவருக்கு முதன் முறையாக வாய்ப்பு கொடுத்து பின்னணி பாடகியாக அறிமுகமாக்கினார்.
மேலும் இந்தப் பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருந்திருக்கிறார்.
பாடகி சின்மய் நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகினார். இந்நிலையில் பாடகி சின்மய் நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்தப் பதிவில் தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது மது போதையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காரில் மோதியதாகவும் தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்த விபத்து பற்றி தான் காவல் துறைக்கு அறிவிக்கவில்லை. எனவும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் என தெரிவித்துள்ளார்…