கொடூர வில்லனாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன்… யார் இந்த யுகேந்திரன்??

சினிமா

சினிமாவில் தன் தனித்துவமான குரலால் பலரையும் கவர்ந்தவர் தான் மலேசிய வாசுதேவன். இவர் சினிமாவில் சுமார் 1000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். மலேசிய வாசுதேவனுக்கு யுகேந்திரன் என்ற மகனும் பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர்.

அதில் யுகேந்திரன் நம் எல்லோருக்கும் பரீட்சயமானவர் தான். சிறுவயதில் இருந்து இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர் தன் 10 வயதில் முதல் இசைக் கச்சேரியை நடத்தினார். அதனை தொடர்ந்து தன் தந்தையுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் பாட ஆரம்பித்தார்.

அதன் பின் ரோஜாவனம் என்ற படத்தில் “பொள்ளாச்சி சந்தையில…” என்ற தனது முதல் பாடலை பாடினார் அதன் பின் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் “பார்த்தேன் பார்த்தேன்…” என்ற பாடலை பாடினார். இப்படி ஏ.ஆர். ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா போன்ற பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

மேலும் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியிருந்த யுகேந்திரன் மாலினி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் PhD பட்டம் முடித்தவர். இவர்களுக்கு விஷாஷன், கிஷன், தர்ஷன் என்று மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இவர் நியூஸிலாந்தில் வசித்து வருகிறார். சினிமாவில் பாடல் பாடுவதில் மட்டும் இல்லாமல் அஜித்குமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். அதன் பின் அடுத்தடுத்து பட வாய்ப்பு வர திருப்பாச்சி, மதுர, பகவதி போன்ற திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கையோடு கை, பச்சை நிறமே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யுகேந்திரன் போட்டியாளராக கலந்துக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட யுகேந்திரனுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் மலேசிய வாசுதேவனின் கண்ணாடி ஒன்றை பரிசாக கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார். யுகேந்திரனுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அவரின் வெற்றிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *