பிரபல விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் அவர் சொந்தமாக youtube சேனல் நடத்தி வருகிறார்.
அது மட்டுமின்றி கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் இந்நிலையில் வெங்கடேஷ் பட் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மாலுக்கு மகளுடன் சென்ற போது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மாலில் இருக்கும் எஸ்கலேட்டரில் செல்லும் போது மகளின் கால் சிக்கிக்கொண்டது என்றும், தான் இழுக்காமல் இருந்திருந்தால் ஒரு பெரிய ஆபத்து மகளுக்கு ஏற்பட்டு இருக்கும் என வெங்கடேஷ் பட் அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருக்கிறார்.
அதனால் குழந்தைகளை கூட்டி செல்லும் போது கவனத்துடன் இருங்கள் என அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார். வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது அந்த மால் நிர்வாகம் அவருக்கு போன் செய்து பேசி இருக்கிறார்களாம்…