பரிதாபமாக உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர்!! அதிர்ச்சசியில் ரசிகர்கள்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்…!!

சினிமா

பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றியவர் தான் வி.ஏ.துரை. இவர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பிதாமகன், கஜேந்திரா, லவ்லி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் குறிப்பாக இவர் தயாரிப்பில், இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்திருந்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

ஆனால் சில தோல்வி படங்களால் தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்டு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு உதவ வேண்டும் என்று வி.ஏ.துரை கடந்த மார்ச் மாதம் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு சூர்யா, விக்ரம் போன்ற பிரபலங்கள் உதவினார்கள். சிகிச்சையில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டு இருந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் வீட்டில் அவர் வசித்து வந்தார்.

மேலும் இந்நிலையில் வி.ஏ.துரை நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்து இருக்கிறார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவிதது வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *