பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்களின் அடிமை தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மேலும் மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சனையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது. ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். குணசேகரன் வருகின்றார் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில், அவர் வருவதற்கு தாமதமானதால் கதிர் மீது புகார் கொடுக்கப்பட்டு பொலிசார் கைது செய்கின்றனர்.
சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு நடிகர் வேல ராமமூர்த்தி வருகின்றார் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், காட்சியில் காண்பதற்கு மக்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். பிரபல ரிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருவதால், டி ஆர் பி-யில் முதல் இடம் பிடிப்பதற்கு நேரத்தையும் மாற்றியுள்ளது…