பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல… முதன் முறையாக மனைவியின் மரணம் குறித்து மனம் திறந்த போனி கபூர்…!!

சினிமா

திரையுலகில் 50 ஆண்டுகளாக 5 மொழியில் திரைத்துறையை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. அதாவது இவர் தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். மொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது.

அதன் பின் குளியல் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இவரின் கணவரான போனி கபூர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல எனவும், அது தற்செயலாக நடந்த ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் “இது குறித்து என்னிடம் 24 முதல் 48 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகப்படும் படியான விஷயங்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவரது மரணம் தற்செயலானது என அறிக்கை வெளியிடப்பட்டது” என கூறியுள்ளார்.

அத்தோடு திருமணத்துக்கு பின் 2 முறை ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு ஸ்ரீதேவி இருமுறை சுயநினைவு இல்லாமல் இருந்தார். என கூறியுள்ளார் போனிகபூர். ஒரு முறை ஷூட்டிங்கின் போது ஸ்ரீதேவி மயங்கி விழுந்து அவருக்கு பல் உடைந்ததாக என்னிடம் நடிகர் நாகர்ஜுனா கூறியிருக்கின்றார் என போனி கபூர் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *