எனக்கு இந்த ரஜினி, அஜித்தெல்லாம் போட்டி கிடையாது.. விஜய்யுடன் போட்டிப்போட அண்ணாச்சி எடுத்த புது ரூட்..

சினிமா

தன் கடைக்கு தானே நடித்தும் சினிமா நடிகைகளை நடிக்க வைத்தும் விளம்பரம் செய்து வந்த லெஜண்ட் சரவணா இரட்டை சகோதரர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.

தி லெஜண்ட் படம் சமீபத்தில் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல எ திர் விமர்சனம் வந்தாலும் துளிக்கூட கவலைப்படாமல் படத்தின் பிரஸ்மீட்டையும் வைத்து பிரபலப்படுத்தினார்.

சமுகவலைத்தளத்தை ஆரம்பித்தது முதல் சூப்பர் ஸ்டார், உலகநாயகனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதேபோல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஃபுல் மேக்கப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வாரிசு ஷூட்டிங்கின் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுத்திருந்தார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

விக்கில் அண்ணாச்சி போட்டி அதை பார்த்த நெட்டிசன்கள் விக் வைத்திருக்கிறார் விஜய் என்று கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் சரவணன் அண்ணாச்சியும் புதிய விக்கினை மாற்றி செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.விஜய்க்கு போட்டி அஜித், ரஜினி, சூர்யாலாம் கிடையாது அண்ணாச்சி தான் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.