நடிகை ஷகீலா தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை ஷகீலா தற்போது காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமைத்து வந்தார்.
தற்போது யூடியூப் பக்கத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அப்படி ஒரு பிரபலத்துடன் பேட்டி எடுத்த போது நடிகை ஷகீலா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான விஷயத்தை கூறியுள்ளார். என் அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று இருந்தேன்.
மருத்துவர் எழுதியது எனக்கு புரியாததால் அவரிடம் சந்தேகத்தை கேட்டேன். அப்போது அவர் என் அருகில் வந்து என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் இப்போ சொல்லு என்றார். உடனே நான் பளார் பளார் என்று அவரை அடித்தேன்.
நான் அடித்த சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் உள்ளே வந்து என்னை சமாதானப்படுத்தி அனுப்பினார். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் எல்லா துறையிலும் இருக்கிறது என்பதற்காக கூறினேன் என்று கூறியுள்ளார்…