பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் தற்போது தினம்தோறும் பல சண்டைகள் வர தொடங்கி இருக்கிறது. இன்று வனிதா மகள் ஜோவிகா அவரது படிப்பை பற்றி யாரும் பேசவே கூடாது என சண்டை போட்டார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. Basic education இருக்க வேண்டும்.
டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அத்தியாவசியம் என விசித்ரா கூறுகிறார். ‘டிக்கெட் புக் பண்ண ஏஜென்சி இருக்கு, பேங்க்ல தெரியலைனா போய் கேஷியர் கிட்ட கேளுங்க, அதுக்கு தான காசு குடுக்குறீங்க’ என ஜோவிகா பதில் கொடுத்தார்.
மேலும் வாக்குவாதம் நடைபெறும் போது ஜோவிகா விசித்ராவின் வயதுக்கு கூட மரியாதை எதுவும் தராமல் ஒருமையில் தான் பேசினார். அதன் பிறகு விசித்ரா இதை நினைத்து கண்ணீர் விட மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்..
#Day5 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/JjphvL2yfI
— Vijay Television (@vijaytelevision) October 6, 2023