திரையுலகில் தமிழ் சினிமாவில் வெளியான பிரம்மா, மாயவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை லாவண்யா திரிபாதி. இவருக்கு இந்த படங்களை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் அதன் பின் இவர் தெலுங்கு நடிகர் சுனிசித் ஒரு பேட்டியில் இவரை பற்றி பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நடிகை லாவண்யாவிற்கும், தனக்கும் திருமணம் நடந்ததாக கூறியுள்ளார்.
அதன் பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதுமட்டுமின்றி நடிகை லாவண்யா கர்ப்பமாகி மூன்று முறை கருவை கலைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த நடிகை லாவண்யா திரிபாதி அப்படி எதும் நடக்கவில்லை. அவர் என்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். மேலும் இது குறித்து நடிகை லாவண்யா ஹைதராபாத் சைபர் கிரைம் போலிஸில் நடிகர் சுனிசித் மீது புகார் அளித்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…