திரையுலகில் தில் ராஜு பிரபல தயாரிப்பாளர் ஆவர். இவர் தெலுங்கு திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு படத்தை தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி நேற்று இரவு காலமானார். இந்த நிலையில் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 86 வயதில் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது…