தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் ஒரு காலகட்டத்தில் வெற்றிகரமாக பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக திரையில் ஜொலித்து வருவார்கள், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பார்கள் பின்னர் நாளடைவில் பட தோல்வியின் காரணமாகவும் வயது முதிர்ச்சியினாலும் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல மொழிகளிலும் இப்படி தான். சில நடிகர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பித்து இன்று வரை முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகர் அருண் பாண்டியன்
90களின் நடிகர்கள் பலர் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளனர். அந்த வகையில் ஒருவர் தான் அருண் பாண்டியன். தமிழ் சினிமாவின் 80, 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அருண்பாண்டியன்.
மேலும் இவர் தமிழ்லில் ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக கலக்கிய அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தான் நடித்த முதல் படத்திற்கு விருது வாங்கி அசத்தியுள்ளார். நடிகராகவும், வில்லனாக களமிறங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார்.
மாடலிங் துறையில் இருந்த இவர் தனது தந்தைக்கு உதவியாகவும் இருந்து வந்த நிலையில், தும்பா என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. காடுகளை பாதுகாப்பது, விலக்குகளை பாதுகாப்பது என்பதை சொல்லும் ஒரு கருத்துப் படமாக இருந்ததால் குழந்தைகளை கூட மிகவும் கவர்ந்தது.
அங்காடி தெரு, சமிபத்தில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். தற்போது இவரது மகள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார். நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் உள்ளனர். தற்போது இவரது குடும்பபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது…