பெண்களை பொறுத்தவரை ஒரு சிலர் அவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள். ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆபத்தா என்று ஒரு சிலர் கேட்பார்கள். ஆபத்து கிடையாது. பேங்க்ல காலில் கயிறு கட்டி கொள்வதால் நம்மை எந்த தீய சக்திகள் எதுவும் நம்மை அண்டாது. அதுமட்டுமின்றி செய்வினை சூனியங்கள் எதுவும் நெருங்காது. கண் திருஷ்டி படாது.
அது மட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது. கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட வேண்டும். இந்த கயிறை பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமை கட்டி கொள்வது மிகச் சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.
கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டால் நம்மை அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி நீண்ட கால தீராத நோய் இருந்தாலோ உ டல் நல கோளாறுகள் இருந்தாலோ இந்த கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும்.
இதனை கட்டும் போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் என்று உச்சரிக்கலாம். பருவமடைந்த பெண்கள் ஆரம்பத்தில் வெளியே செல்லும் போது இதனை கட்டி விடுவது மிக நல்லது..