நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு மொட்டை மாடியில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தில் மிகவும் வைரலானார்.
மேலும் அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசி இருக்கின்றார். நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்று கூறியுள்ளார். இப்போது என் வாழ்க்கையில் யாரும் இல்லை நான் சிங்கிளாகத் தான் இருக்கின்றேன்.
ஒருவரை எனக்கு இப்படி இருக்க வேண்டும் என்றால் அவரது பர்சனாலிட்டியை வைத்து தான் பிடிக்கும் என்று நடிகை ரம்யா பாண்டியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்…
அந்த வீடியோ இதோ..