திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து அதன் பின் தமிழ் சினிமாவில் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் தான் நடிகை ஊர்வசி.
மேலும் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இவர் 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பின் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை இரண்டாம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 46 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது இரண்டாவது கணவர் மற்றும் மகன், மகளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயாராகி விட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்…