அடக்கொடுமையே… 20 நிமிஷம் காட்சி தான்… ஆனால் அந்த நடிகைக்கு 9 கோடியை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்!! இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் இன்றைய கால தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் நான் ஈ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கிய பின் பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கி பல ஆயிரம் கோடி வசூலை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் அதன் பின் நடிகர் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த ஆர் ஆர் ஆர் என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த போது கொரோனா லாக்டவுனால் இரண்டு மாதங்கள் தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் மார்க்கெட் கோடிக் கணக்கில் வசூலானதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெரும் என்று கூறி வருகிறார்கள். தற்போது இந்த படத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஆலியா பட் பாலிவுட் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர். என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜய் தேவ்கன் சில காட்சிகளில் கோமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்து நடித்து கொடுத்ததற்காக 35 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அவரை போல 20 நிமிடம் மட்டுமே வரும் நடிகை ஆலியா பட்டிற்கு சுமார் 9 கோடி சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். என்ன இருந்தாலும் பாலிவுட் மார்க்கெட்டிற்காக இப்படி கொடுத்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இது ரொம்ப ஓவர் என்று கமென்ட் செய்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *