திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்து இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தான் ஷில்பா ஷெட்டி. தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு தேவாவின் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் பக்கமே திரும்பினார்.
மேலும் நடிகை ஷில்பா. தற்போது 44 வயதாகும் ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவருடன் திருமணமாகி 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகனும் உள்ளார். தற்போது கணவரின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 15ல் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்…