வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்த படம் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம். அதில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இயக்குனர் சந்திரசேகரின் மகன் அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்.
நடிகர் விஜயோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகி விடலாம் என்னும் சூழல் இருக்கிறது. அதே போல் தமிழகத்திற்கு இணையாக கேரளத்திலும் விஜய்க்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கேரளத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண், தனது உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கே வாத்தி கம்மிங் பாடல் ஒலித்துள்ளது. அந்த பாட்டைக் கேட்டதும் பலரும் எழுந்து நின்று ஆடியிருக்கிறார்கள். அப்போது பிரவீனா ஆர்வமிகுதியில் தான் அமர்ந்திருந்த ஷேரில் இருந்தே வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்டெப் போட்டிருக்கிறார். இதை அவருக்கே தெரியாமல் யாரோ செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய அதில் இளம் பெண் பிரவீனாவின் க்யூட் ரியாக்சன் வைரல் ஆகி வருகிறது…