நான் இவரைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… வெளிப்படையாக கூறிய நடிகை ஸ்ரீ திவ்யா!! யார் தெரியுமா??

சினிமா

தெலுங்கு சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் ஜங்ஸன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன் பின் மனசாரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய ஸ்ரீ திவ்யா. தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதன் பின் இவர் ஜீவா, வெள்ளைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், மருது, காஸ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொர போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் ஜன கன மன படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இதனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் 30 வயதாகும் ஸ்ரீதிவ்யா தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து உள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீ திவ்யாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் அது காதல் திருமணமா இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாஎன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த ஸ்ரீ திவ்யா  என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாகத் தான் இருக்கும்.

நான் என்னுடைய காதலனை தான் திருமணம் செய்ய போகிறேன். விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *