திரையுலகை பொறுத்தவரை சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது. தற்போது மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். இவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகி உள்ளனர். அவருக்கு கணவர், அம்மா மற்றும் அப்பா ஆகியோர் இருக்கின்றனர். ரெஞ்சுஷா மேனன் இறப்புக்கு பின் இருக்கும் காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாக அவர் பண பிரச்சனையில் சிக்கி இருந்தார் என்று கூறப்படுகிறது. Sthree, Nizhalattam போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நடிகையின் மரணம் தற்போது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது…