தமிழ் சினிமாவில் 11 வதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை கவிதா. இவர் ரஜினி, சிவாஜிபோன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் தனது நடிப்புத் திறமையினை காட்டி அசத்தியுள்ள இவர் சின்னத்திரையில் கங்கா, நந்தினி சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். அதன் பின் பாஜகவில் இணைந்து பணியாற்றிய இவரின் வாழ்க்கையை கொ ரோனா புரட்டிப் போட்டது.
ஆம் கவிதாவின் மகன் மற்றும் கணவர் இருவரும் அடுத்தடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். இந்த சோகத்தில் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்ற இவரை உறவினர்கள் காப்பாற்றி, பின்பு படிப்படியாக மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் ரஜினியுடன், ஏற்பட்ட கிசுகிசுவிற்கு பற்றி பேசியுள்ளார். மோகன் பாபு உடன் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது ரஜினியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆனால் இதனை கவிதா பெரிதுபடுத்த வேண்டும் என்று நினைத்த நிலையில்,
இதனைக் கேட்ட மோகன் பாபு கடுப்பாகியதுடன், இந்த சம்பவம் கவிதாவின் கரியரை பாதிக்கும் என்று, படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு கவிதாவை அழைத்துக்கொண்டு நேரடியாக இது குறித்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று சண்டையிட்டுள்ளார்.
அதன் பின் இந்த சம்பவத்திற்கு மறுப்பு செய்தி போடுவதாக அந்த பத்திரிக்கை கூறிய பின்னரே இந்த வதந்திக்கு முடிவு வந்ததாகவும், ஆனால் அந்த தருணத்தில் ரஜினியுடன் ரகசிய திருமணம் என்ற செய்தி காட்டுத்தீ போன்று பரவியதாகவும் நடிகை கவிதா கூறியுள்ளார்…