மலையாள சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையும், மருத்துவருமான ப்ரியா 8 மாத கர்ப்பத்தோடு, திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பார்ப்போருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல எதிர்பாராத மரணங்கள் தொடர்ந்து வருகிறது.
மேலும் அந்த வகையில் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘கருத்த முத்து’ சீரியலில் நடித்து பிரபலமான ப்ரியா 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 35 இவர் ஒரு மருத்துவர் ஆவர்.
இவர் பெங்களூருவை சேர்ந்த சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற ப்ரியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் ப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சைகளுக்கு மத்தியில் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது மலையாள மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…