திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டோ உயிரிழந்து வருகின்றார்கள்.
மேலும் இப்படி இருக்கும் நிலையில் பிரபல மூத்த நடிகர் ஜூனியர் பாலையா தனது இல்லத்தில் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 70 வயது ஆகின்றது. இவர் கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை போன்ற ஏராளமான திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். நாளை இவரது உடலை தகரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..