விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’ என்ற தொடரின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை பேட்டியொன்றில் மனம் விட்டு பேசியுள்ளார். அதன் படி அவர் அளித்த பேட்டியில், ‘நான் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தேன்.
அதன் பிறகு தான் என் வாழ்க்கையை மாற்றினேன். ஐஎஸ்ஏ தேர்வு எழுவதற்காக டெல்லி போகும் போது என் கணவர் சர்டிபிகேட் அனைத்தையும் கிழித்து விட்டார். இதையடுத்து என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணிந்தேன். ஆனாலும் அந்த நேரத்தில தான் எனக்குள்ள ஒரு பூதம் இருக்கு என புரிந்து கொண்டேன்.
செத்து போய் இருந்தா, நான் இன்றைக்கு அடையாளமே தெரியாமல் போய் இருப்பேன். ஆனால் இன்றைக்கு என்ன பத்து பேருக்கு தெரியுது. சினிமாவில் நடித்து பிரபலமாகனும், பணம் சம்பாதிக்கணும் என்று நான் விரும்பல.
ஆனால் இந்த சமுதாயத்திற்கு உண்மையா இருக்கேன். ஆனால் இந்த உலகத்தில உள்ளவங்க பொய் பேசுறாங்க. நான் உண்மை சொல்றதால தான் அத அதிகம் பேர் கேட்கிறாங்க’ என கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர்..