அவன் இவன் படத்தில் நடித்த நடிகரின் மனைவியா இவங்க? அட இந்த பிரபல நடிகையா? அதுவும் காதல் திருமணமா? யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் அவர்களது கதாபாத்திரத்தின் மூலம் மக்களால் பிரபலமாகின்றனர். மேலும் அதை தாண்டி அவர்களது நிஜ பெயரோ அல்லது அவர்களது இயல்பு வாழ்க்கை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை.

மேலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜிஎம் குமார் மனைவி 80களில் முன்னணி கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. பாலா இயக்கும் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் GM குமார். அதிலும் அவன் இவன் படத்தில் ஐனஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அது மட்டுமில்லாமல் பல படங்களில் உதவி இயக்குனராகவும் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக பரத் மற்றும் பசுபதி நடிப்பில் வெளியான வெயில் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமானது.

இவர் 80களில் கதாநாயகியாக வலம் வந்த பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லவி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *