தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 2002ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் தான் அற்புதம். இந்த படத்தினை இயக்குனர் அற்புதன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், குணால், பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், லாவண்யா, நந்திதா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மேலும் இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் 52 வயதாகும் இவர் அற்புதம் படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், செய்யவே சிறுகாளி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்…