நடிகை ரீமாசென்னா இது?? திருமணமாகி உடல் எடை கூடி ஆளே அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகை ரீமாசென்!! இனி அம்மா கதாபாத்திரம் தான் போல…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் நடிகைகள் வந்த போதிலும் கூட 90-களின் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளை மறக்க முடியாது. காரணம் அந்த அளவிற்கு அவர்கள் தங்களது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் இன்றைக்கும் பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டனர்.

மேலும் அந்த வகையில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் மின்னலே. இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ரீமாசென் நடித்திருந்தார். இவர் நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதில் இடம் பிடித்தார். கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் மும்பையில் கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் திரையுலகில் நுழைந்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து கதாநாயகியாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்றாற் போல் பல குணசித்திர முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். சொல்ல போனால் அந்த காலத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம் பட நடிக்கும் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த ரீமா சென் கடைசியாக சட்டம் ஒரு இ ருட்ட றை எனும் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அதனை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு சிவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ருத்ரவீர் சிங் எனும் மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

அந்த காலத்தில் கட்டழகு ராணியாக வலம் வந்த இவர் தற்போது உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னா இது என வாயடை த்து போயுள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *